தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பொது தேர்வு காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 6ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் செய்முறைத் தேர்வு நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே மாதம் 2ஆம் தேதி வெளியாகிறது. 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மே 3ஆம் தேதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி கல்வித்துறைக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

  • வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட வேண்டும்.
  • மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம்(mask) அணிந்திருக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை அவசியம் செய்யப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி வைத்து இருக்க வேண்டும்.
  • மதிய உணவு சாப்பிடும் போது மாணவர்கள் தனி தனியாக அமர்ந்து சாப்பிடுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • வகுப்பறை ஜன்னல், கதவுகள் கிருமி நாசினி மூலம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு வகுப்பறையிலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் உள்ள பதாகைகளை வைத்திருக்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

 

 

See also  நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் - ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Categorized in: