தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை காலை 6.00 மணி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில செயல்பாடுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ATM, வங்கி சேவைகள் தொடர்ந்து நடைபெற அனுமதி அலுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நியாயவிலை கடைகள் செவ்வாய் கிழமை முதல் செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை செய்யப்படும் என்று தலைமை செயலாளர் வெ. இறையன்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகள் திறப்பதற்கான அறிக்கையை அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை திறந்து விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கிட வேண்டும். கொரோனா நிவாரண நிதி ரூ.2000 பெறாதவர்களுக்கு தொகையை வழங்க வேண்டும். இந்த பணிகளின் போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.