ஹைலைட்ஸ்:

  • உலகளவு கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது.
  • கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி, மக்களை பாடாய்படுத்தி விட்டது. தற்போது தொற்று பரவல் சற்று குறைந்து ஓரளவு பரவாயில்லை என்ற நிலைமைக்கு வந்திருக்கிறது.

சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல், படுக்கைகள் கிடைக்காமல் பலர் உயிரிழப்பு என்ற மோசமான நிலையும் இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் 3,741 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது.

கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. இந்தியா, கொரோனா உயிரிழப்பில் 3 லட்சத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது இந்தியாவில் 3,03,751 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா 5,89,703 உயிரிழப்புகளுடன் முதல் இடத்திலும், பிரேசில் 4,48,208 உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

உலக அளவு கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,892,001 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,751,681 ஆக உள்ளது. பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

See also  ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் மே மாதம் இறுதிவரை ரத்து செய்யப்படும் - பிசிசிஐ அறிவிப்பு