ஹைலைட்ஸ் : வங்கிகள் நான்கு மணி நேரம் மட்டுமே செயல்படும். ஆதார் கார்டு திருத்தும் செய்வதற்க்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ATMகள் 24 மணி நேரமும் செயல்படும். கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இன்று (ஏப்ரல் 25) தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே செயல்படும். வங்கிகள் நான்கு மணி நேரம் மட்டுமே செயல்படும் என்பதால் பொதுமக்கள் அதற்ககு ஏற்றவாறு வங்கி செயல்பாடுகளை மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல், ஆதார் கார்டு பதிவு செய்தல், ஆதார் கார்டு திருத்தும் செய்வதற்க்கான பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…
Author: Pradeepa
நடிகர்: கார்த்தி நடிகை: ராஷி கன்னா & ராஜீஷா விஜயன். பி.எஸ் மித்ரான் இயக்கியுள்ளார் இசை : ஜி.வி.பிரகாஷ்குமார் டிஓபி ஜார்ஜ் சி வில்லியம்ஸ் கலை: கே காதிர் ஆசிரியர்: ரூபன் ஸ்டண்ட்: திலீப் சுப்பாராயண் ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா டி எழுத்தாளர்கள்: எம்.ஆர். பொன் பார்த்திபன், ரோஜு, பிபின் ராகு பாடல்: யுகபாரதி வி.எஃப்.எக்ஸ்: ஹரிஹாரா சுதான் தயாரிப்பு நிர்வாகி: ஏ.பி. பால் பாண்டி தயாரிப்பு மேலாளர்: ஜே.கிரி நாத் ஸ்டில்ஸ்: ஜி.ஆனந்த்குமார் விளம்பர ஸ்டில்கள்: ஜோசப் எம் டேனியல் புரோ: ஜான்சன் விளம்பர வடிவமைப்புகள்: சிவகுமார் எஸ் / சிவா டிஜிட்டல் கலை டிஜிட்டல் மீடியா ஏஜென்சி:ஸ்கைசினிமாஸ் நிர்வாக தயாரிப்பாளர்: கிருபாகரன் ராமசாமி தயாரித்தவர்: எஸ்.லட்சுமன் குமார்
நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள் நடிகர்கள்: மிர்ச்சி சிவா, நிக்கி கால்ரானி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, அக்சரா கவுடா, மயில்சாமி, சிங்கமுத்து, ரவி மரியா, கிங்ஸ்லி & மற்றவர்கள் தயாரிப்பாளர்: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக தயாரிப்பாளர்: சித்தார்த் ரவிபதி விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ் வரி தயாரிப்பாளர்: சுப்பிரமணியன் நாராயணன் இயக்குனர்: ரம்பலா ஒளிப்பதிவாளர்: ராஜா பட்டாச்சார்ஜி இசை இயக்குனர்: விக்ரம் செல்வா கலை இயக்குனர்: விதேஷ் ஆசிரியர்: மாதவன் விளம்பர வடிவமைப்பாளர்: பவன் ஆடை வடிவமைப்பாளர்: அபிநயா கே தயாரிப்பு மேலாளர்: என்.ஆர். குமார்
ஹைலைட்ஸ் : தமிழக அரசு நாளை (ஞாயிறு) முழுநேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், பால் வினியோகம் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை செயல்பட அனுமதி இல்லை. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழக அரசு நாளை (ஞாயிறு) முழுநேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இவர்களுடைய வாகனங்களையும் பறிமுதல் செய்ய போவதாக காவல்துறை எச்சரித்துள்ளது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி இரவு நேர ஊரடங்கை பிறப்பித்தது. இரவு நேர ஊடங்கின்போது, இரவு 10 மணி…
ஹைலைட்ஸ் : மும்பை அணியின் கேப்டன்,ரோஹித் சர்மா, 52 பந்துகளில் 5 பவுண்டரி , 2 சிக்சர்களை அடித்து 63 ரன்கள் எடுத்து டப் குடுத்தார். கிறிஸ் கெயில் சிக்சர் ,பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்டார். நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தன்னுடைய 2வது வெற்றியை தொட்டது. 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின், 17 வது லீக் போட்டியானது சென்னை எம். எ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களதில் இறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக டி காக்-ரோஹித் சர்மா இருவரும் கைகோர்த்ததில் டி காக் 3 ரன்கள் மட்டுமே எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் களம் இறங்கிய இஷான் கிஷன் 6 ரன்கள்…
ஹைலைட்ஸ் : ‘விராபின்’ என்ற வைரஸ் தடுப்பு மருந்து இந்த வைரஸ் தடுப்பு மருந்தை சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ளது விராபின் வைரஸ் தடுப்பு மருந்தை பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இத்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகமாக பாதிப்படைந்த கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாட்டில் ரெம்டிசிவிர் மருத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சைடஸ் கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் ‘விராபின்’ என்ற வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. ரெம்டிசிவிர் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் விராபின் வைரஸ் தடுப்பு மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. விராபின் தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தோற்று தோன்றிய உடன் செலுத்தி கொண்டார் வைரஸ் தொற்றின் தாக்கம் குறையும். கொரோனா வைரஸ் மட்டுமின்றி இதர வைரஸ்…
ஹைலைட்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதலிடம். கேப்டன் கோலி (ம) படிக்கல் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தேவ்தத் படிக்கலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரில் 16 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கேப்டன் விராட் கோலி பௌலிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் ஒருசில ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழத்தனர். இந்த நிலையில் சிவம் துபே, ரியான் பராக் இருவருக்குமான பார்ட்னெர்ஷிப் கைகொடுத்தது. சிவம் துபே 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசியில், ராகுல் திவார்டியா திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்கள் சேர்த்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தலைமையில் சிராஜ்…
ஹைலைட்ஸ் 19 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது 10 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 11 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை ரெம்டிசிவர் மருந்து உற்பத்தி 34 லட்சத்தில் இருந்து 74 லட்சமாக உயர்ந்து உள்ளது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பத்தொன்பது மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் குறைபாட்டால் கொரோனா நோயாளிகளின் இறப்பு அதிகரிக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகம் 10 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 11 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு…
ஹைலைட்ஸ் 70000 மேற்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் 300 முதல் 400 வரையிலான கூடுதல் பேருந்துகள் இயக்கம் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும் போக்குவரத்து துறை செயலாளர் சி. சத்தியமூர்த்தி நேற்று(ஏப்ரல் 21) செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்து கழகங்களில் 120000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 70000 மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயக்கத்தில் உள்ள போருந்துகள் கிருமி நாசுனி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளதால் இரவு 10.00 மணிக்குள் பேருந்துகள் சென்றடைய வேண்டும்…
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரேம், லீலாவதி, ராஜேஸ்வரி, செல்வராஜ், சிராஜ் உள்ளிட்ட 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் 7 பேரின் மரணத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று விளக்கமளித்தார். உயிரிழந்தவர்கள் உடல் ரீதியான பிரச்சனை உள்ளவர்கள் என்றும், அதில் சிலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் கூறினார். மேலும், பொது பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நோயாளிகளில் 3 பேர் திடீரென உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்தார்…
மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் இதுவரை பறந்ததில்லை என்ற நிலையை மாற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை மனித குலத்தின் மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. விண்வெளி மையமான நாசா விடாமுயற்சி என்று கருதப்படும் பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரையிறக்கியது. அதில் உள்ள 1 கிலோ 800 கிராம் எடையுள்ள இன்ஜெனியூட்டி என்ற சிறிய ஹெலிகாப்டர் கடந்த ஜூலை மாதம் விண்கலத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது. பெர்சிவரன்ஸ் என்ற விண்ணூர்தி 7 மாதங்களில் 292 கிலோ மீட்டர் பயணம் செய்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ஜெசோரா பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனால் பெர்சிவரன்ஸ் ரோவரை வழிநடத்தும் குழுவின் தலைவராக பணியாற்றிய சுவாதி மோகனுக்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்தது. அடுத்த சில நாட்களில் பெர்சிவரன்ஸ் எடுத்த…
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்க்காக ‘ஆன்லைன்’ வாயிலாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குள் வந்து திருப்பதி…
மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக கொள்முதல் செய்ய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகள் ஆன ரெம்டிசிவர் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மருந்து தயாரிக்கும் நிறுவங்களின் உரிமையாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க உள்ளார். தற்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில்…
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்புகளால் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதேசமயம் சில கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் கோவிட்-19 பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் JEE மெயின் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 முதல் 30ஆம் தேதி வரை நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டரில் பக்கத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு JEE மெயின் – 2021 ஏப்ரல் மாதம் நடைபெறும் செஷன் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பாதுகாப்பு தான் முதன்மையானது என்று பதிவு செய்துள்ளார்.…
