இன்றைய நவீன காலத்தில், பலருக்கு தங்களின் சரியான ராசி மற்றும் நட்சத்திரம் என்ன என்பது தெரிவதில்லை. அவர்களுக்குப் பிறந்த தேதி மட்டுமே நினைவில் இருக்கும். இதனால், தங்களின் பிறந்த தேதியை வைத்து ராசி நட்சத்திரத்தை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேர வரையறைகள் உள்ளன. எனவே, ராசி நட்சத்திரம் தெரியாதவர்களின் நலனுக்காக, இப்பதிவில் பிறந்த தேதியை மட்டும் வைத்து இலவசமாக ராசி நட்சத்திரத்தை எவ்வாறு கணிப்பது என்பது குறித்தான முழு வழிமுறைகளையும் தருகிறோம்.
கீழே உள்ள வசதியில் உங்களின் பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரத்தை (காலை அல்லது மாலை என்பதை) உள்ளிடும்போது, உங்களின் பிறந்த கிழமை, ராசி, நட்சத்திரம், ஜென்ம ராசி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எழுத்து வடிவில் தெளிவாக அறியலாம்.
பொதுவாக, நமது பிறப்பு நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. நட்சத்திரம் கணிக்கப்படும் முறை என்னவென்றால், ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் அமைந்திருக்கிறதோ, அந்த நட்சத்திரமே அந்தக் குழந்தையின் பிறப்பு அல்லது ஜென்ம நட்சத்திரமாகும். பல சமயங்களில், குழந்தை பிறக்கும் போது அந்த நட்சத்திரத்தை குறித்து வைக்க மறந்துவிடுகின்றனர். இதனால், பின்னர் அந்தக் குழந்தைக்கு என்ன ராசி, என்ன நட்சத்திரம் என்று தெரியாமல் போய்விடுகிறது. ஆனால், ஒருவருடைய பிறந்த தேதி மட்டும் இருக்குமானால், அவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை மிகவும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை அறிய விரும்புபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘ராசி நட்சத்திர கால்குலேட்டர்’ அட்டவணையில் உங்களின் பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரத்தை உள்ளிடுவதன் மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம். இந்த வசதிக்கு எந்த ஆண்ட்ராய்டு ஆப் (Android App) தேவையில்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தைப் (Option) பயன்படுத்தி, உங்கள் குழந்தையின் அல்லது உங்களுடைய சொந்த ராசி மற்றும் நட்சத்திரத்தை இலவசமாகவும் எளிமையாகவும் கண்டுபிடிக்கலாம்.
ஜாதகம் மற்றும் ராசி சக்கரம்:
ஜாதகத்தில் மொத்தம் 12 ராசி கட்டங்கள், 9 கிரகங்கள், 12 வீடுகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ராசி சக்கரம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பகுதியும் ‘வீடுகள்’ என அழைக்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் ராசி சக்கரம் வட்ட வடிவத்தில் இருந்தாலும், இந்து ஜோதிடத்தின்படி இது சதுர வடிவத்தில் காட்சியளிக்கிறது. ஒருவருடைய ராசியின் அடிப்படையிலேயே அவர்களின் நிகழ்காலம், எதிர்காலம், சுப பலன்கள் மற்றும் அசுப பலன்கள் எப்படி அமையும் என்பன கணிக்கப்படுகின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை அறிந்து வைத்திருப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

