Dark Mode Light Mode

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

ஹைலைட்ஸ்:

  • கொய்யா கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. கொய்யா குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கொய்யா இலையில் தேநீர் தயாரித்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
  • கொய்யாப்பழத்தில் ‘வைட்டமின் சி’ அதிக அளவு உள்ளது. ஆரஞ்சுபழத்தில் உள்ள வைட்டமின் சி அளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

நாம் எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்று கொய்யா. இது மிகவும் சுவையான பழம். கொய்யாப்பழம் விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைக்க கூடியது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொய்யாபழம் மட்டுமல்ல, அதன் இலைகளும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். மேலும் நம் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்த கொய்யாப்பழம் மிகவும் உதவி புரிகிறது. கொய்யாவில் தான் ஆரஞ்சைவிட 4 மடங்கு அதிக விட்டமின் சி உள்ளது. கொய்யாவின் சில அற்புதமான நன்மைகளை பார்ப்போம்.

Advertisement

நீரிழிவு நோய் தடுப்பு

கொய்யா இலையில் தேநீர் தயாரித்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயைத் தடுக்கும் ஃபைபர் மற்றும் கிளைசெமிக் குறியீடு மற்றப் பழங்களையும் விட கொய்யாவில் அதிக அளவு இருக்கிறது. பொதுவாக ஃபைபர் உள்ளடக்க பழங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரையின் உயர்வை கட்டுப்படுத்தும்.

கர்ப்ப கால பாதுகாப்பு

கொய்யாப்பழத்தில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி -9 ஆகிய சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. கொய்யா குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கருவை நரம்பியல் கோளாறுகளிலிருந்தும் பாதுகாக்கின்றன. கொய்யாபழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏன்னென்றால் பழத்தில் உள்ள வைட்டமின் பி, செல்கள் பிரிவதற்கும் மற்றும் கருவுக்கு டி.என்.ஏ மற்றும் மரபணு பொருட்களை உருவாக்கவும் உதவு செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமான அளவு வைட்டமின் சி பெறுவது மிகவும் முக்கியம். கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மிக அதிக அளவு உள்ளது. ஆரஞ்சுபழத்தில் உள்ள வைட்டமின் சி அளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் கொய்யாவில் உள்ள சத்துக்கள், மோசமான பாக்டீரியாக்களையும் மற்றும் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும் வைரஸ்களையும் அழிக்கிறது. அதனால் தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவது மிகவும் நல்லது.

கண் பார்வை மேம்பாடு

கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்பார்வை ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.மேலும் இது கண் ஆரோக்கியத்தின் சீரழிவையும் தடுக்கிறது. கண்புரை மற்றும் மாகுலர் சிதைவின் தோற்றத்தையும் குறைக்கிறது.

இதய ஆரோக்கியம்

கொய்யா இலைகள் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டு இருக்கிறது. நம் இதயத்தை பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யாபழத்தை ‘மந்திர பழம்’ என்று கூட அழைப்பார்கள். இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்து கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

செரிமான அமைப்பு நன்மைகள்

கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு கொய்யா எளிய தீர்வை தருகிறது. இது ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது. மேலும் இது தொப்பையை குறைக்கும். அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பத்திற்கு கொய்யா தீர்வு தரும்.

கொய்யா இலை சாறு செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது நம் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நடுநிலையாக்குவதால் குடல் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. கொய்யாபழ விதைகள் மெல்லப்பட்டால் அல்லது முழுவதுமாக சாப்பிட்டால் மலமிளக்கியின் விளைவு ஏற்படும்.

Previous Post

அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் 18 - 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை!

Next Post

மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - முதல்வர் கோரிக்கை

Advertisement
Exit mobile version