மனிதர்கள் சாப்பிடுவதில் பல வகையான பழங்கள் இருக்கின்றது. எக்காலத்திலும் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாக பழங்கள் உள்ளன. அதிலும் கடுமையான வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் விரும்பி உண்ணுகின்றன. அப்படி பலவகையான பழங்களில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகளை என்பதை தெரிந்து கொள்வோம்.

முலாம்பழங்களின் நன்மைகள்

கண் பார்வை

முலாம்பழத்தில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது. இந்த வைட்டமின் உடல்நலத்திற்கும் குறிப்பாக கண்பார்வைக்கு மிக அவசியமாய் இருக்கிறது. கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினை தீர்க்கிறது. கண்களை எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கின்றது.

உடல் குளிர்ச்சி

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதால் அனல் காற்று வீசுவதால் உடலில் இருக்கும் நீர் சத்து வெளியேறி உடல் வெப்பம் அடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் அத்தியவசிய உப்பு இழப்பு ஏற்படுகின்றது. கோடை காலங்களில் முலைப்பழங்களை துண்டாக்கி தண்ணீரில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைத்து அதில் முலாம்பழத் துண்டுகளை ஊற வைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.

ரத்த ஓட்டம்

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். கோடைக் காலங்களில் உடலில் நீர் வியர்வையாக வெளியேற்றி விடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து இரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் மூலம் பழங்களை சாப்பிட்டால் அல்லது சாற்றை அருந்தினால் இரத்தத்தில் நீர் சத்து அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.

சிறுநீரகம்

கோடைக்காலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படுகின்றது. இக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்துள்ள முலாம்பழங்களை தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு சிறுநீர்ப் பைகளில் சிறுநீர் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற செய்கிறது.

ஊட்டச்சத்து

நம் உடல் நிலை சிறப்பாக இருக்கவும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ்,கால்சியம் சத்து போன்றவை அத்தியாவசியத் தேவைகளாக இருக்கிறது. இவை அனைத்தும் அவ்வப்போது முலாம்பழம் சாப்பிடுவதால் நம் பெறமுடியும்.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைக்க முலாம்பழம் உதவுகிறது. முலாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு கரையக்கூடிய வேதிப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது. காலை மற்றும் மதிய வேளைகளில் முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது சீக்கிரம் குறைய தொடங்கும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கின்றன.

இதயம்

நம் உடலின் முக்கிய உறுப்பான இதயம் நன்றாக இருப்பது அவசியம். இதற்கு நாம் உணவில் கொழுப்பு சத்து குறைந்த நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை அதிகரித்துக்கொள்ள வேண்டும். முலாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் அடினோசைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால் இது ரத்த செல்களில் உறைவதை தடுத்து இதய சம்பந்தமான நோய்களை பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கின்றது.

புற்றுநோய் தடுப்பு

நம் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களிலும் உடலில் சேரும் பலவகையான நச்சுக்களையும் சேர்மானத்தாலும் புற்றுநோய் ஏற்படுவது அதிகரிக்கின்றது. முலாம்பழங்களில் கரோட்டினாய்டு வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது எனவே முலாம்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.