இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லெக்ஸி ராபின்ஸ் (Lexi Robins)என்ற ஐந்து மாத பெண் குழந்தை, ஒரு அரிய வகை மரபணு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு நோய் இரண்டு மில்லியன் மக்களில் ஒருவரை தான் பாதிக்குமாம். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

லெக்ஸி ராபின்ஸ் என்ற ஐந்து மாத குழந்தைக்கு ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (Fibrodysplasia Ossificans Progressiva – FOP) என்ற அரிய வகை மரபணு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய வகை நோய் காரணமாக, இந்த குழந்தையின் தசைகள், கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகளாக மாறி அதன் உடல் கல்லாக மாறுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட உடல் பகுதியை குழந்தையினால் அசைக்க முடியவில்லை.

இந்த நோய் (FOP) வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அரிய வகை நோயின் விளைவாக உடலில் எலும்புக்கூடுக்கு வெளியே புதிய எலும்புகள் உருவாகிறது. இது ஒருவரின் உடல் இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் உடல் சிறு அதிர்வை சந்திக்கும் போது அந்த பகுதியில் உள்ள தசைகள் எலும்புகளாக மாறுகிறதாம்.

லெக்ஸியின் தாயார் அலெக்ஸாண்ட்ரா ராபின்ஸ் குழந்தையின் இந்த சோக நிலையை குறித்து, பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. தங்களின் ஐந்து மாத பெண் குழந்தையின் கால்களில் உள்ள மாற்றத்தை பார்த்த அந்த தம்பதியினர், மருத்துவர்களிடம் அழைத்து சென்று இருக்கிறார்கள். அங்கு மருத்துவர்கள், லெக்ஸி FOP நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள். அதை கேட்ட குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து குழந்தையின் தாயார் இன்ஸ்டாகிராம் பதிவில் பேசியுள்ளது கண்ணீரை வரவழைக்கிறது.

இந்நோயினால் லெக்ஸிக்கு கீழே விழுவது போன்ற சிறிய அதிர்ச்சிகள் ஏற்பட்டால் கூட பாதிக்கப்பட்ட உடலின் அந்த பகுதி எலும்பாக மாறி விடும். இதனால், வழக்கமான சிகிச்சைகளான ஊசி போடுதல் போன்றவற்றை கூட செய்ய முடியது.

See also  இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம்