நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு தரிப்பில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது உள்ள நிலவரப்படி 18 வயதிற்கு மேல் உள்ள 17.72 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பாரத பயோடெக் நிறுவனம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள செய்தி குறிப்பில் 2 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழகியுள்ளது.

பாரத பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழு முதற்கட்டமாக 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை’செய்ய உள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால் 2 வயது முதல் 18 வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

See also  இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை