ஹைலைட்ஸ் :

  • கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,தடுப்பூசி போடும் பணி தீவிரம்.
  • சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது.
  • கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை, சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது.vikatan 2020 12 6e31dd1a bbd4 450c 993c 1834ba5a319e AP20344405054781

தற்பொழுது இந்திய முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில்,மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய முழுவதும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியாக கோவாக்சினும்,சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியாக கோவிஷீல்டும் தற்பொழுது பயன்பாட்டில் இருந்துவருகின்றது.

இதில் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் ரூ.250 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில்,டோஸின் விலையினை சீரம் நிறுவனம் தற்பொழுது உயர்த்தியுள்ளது.இச்செய்தியானது மருத்துவர்க்ளுக்கும்,பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை தருகின்றது.

சீரம் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் தந்ததில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தடுப்பூசியை ஒப்பிட்டு பார்த்தால் கோவிஷீல்டின் விலை குறைவு என்றும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இருந்தும், இந்த திடீர் விலையேற்றம் பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.