தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Summarize this blog post with:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 7) முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புகள் உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

மேலும் சென்னையை பொறுத்த வரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.