டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா பரவல் காரணமாக பதக்கம் வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது.

மொத்தம் 339 போட்டிகள் நடைபெற உள்ளது. வழக்கமாக போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மேடையில் ஒருவர் கழுத்திலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என தனித்தனியாக பதக்கங்கள் வழங்கப்படும். தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக வீரர்களுக்கு அணிவிக்க வேண்டிய பதக்கங்கள் ஒரு தட்டில் வைத்து முன்னால் நீட்டப்படும் அதனை வீரர், வீராங்கனைகள் தாங்களே எடுத்த கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வீரர் வீராங்கனைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. பதக்கம் பெரும் வீரர், வீராங்கனைகள் பதக்க மேடையில் தனிநபர் இடைவெளியை பின்பற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.

See also  சுல்தான் மூவி official டிரெய்லர்