நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

நேரு விளையாட்டரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் விளையாட்டு வீரர்களுக்கு team sprit மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் விளையாட்டு வீரர்கள் ஒரே நோக்கில் இருந்தால் மட்டுமே முழு வெற்றியை அடைய முடியும். விளையாட்டு துறைக்கு தமிழக அரசு என்றுமே துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி,வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி,வெண்கலம் பதக்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 6 வீரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய்யை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

See also  இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவில் குளறுபடி; மறுமதிப்பீடு செய்ய திட்டம் - அண்ணா பல்கலைக்கழகம்