கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் மே 24 ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைய உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வரும் நிலையில் மேலும் ஊரடங்கு அமல்படுத்த மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வரம் வரை முழு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முதல் ஆலோசனை கூட்டம் கடந்த 13 ஆம் தேதி தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலைமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

நாளை(மே 22 ஆம் தேதி) காலை 10 மணிக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மேலும் அனைத்து கட்சிகளை சார்ந்த சட்டமன்ற பிரதிநிதிகள் 13 பேர், மற்றும் குழு உறுப்பினர்களிடம் 11.30 மணியளவில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

See also  தமிழக ரேசன் கடைகளுக்கு அதிரடி அறிவிப்பு..!