ஹைலைட்ஸ்:

  • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
  • கடைசி ஓவரில் கலக்கிய வீந்திர ஜடேஜா 28 பந்துகளுக்கு 63 ரன்களை குவித்தார்.
  • நான்காவது முறையாக வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளி பட்டியலில் முதலிடம்.

ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தால் சென்னை அணி 191 ரன்கள் குவித்தது.

IPL தொடரின் 19 வது லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகளுடன் மோதின. பெங்களூருக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கேய்க்வாட் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோர் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதனால் பேட்டிங் பவர் பிளே ஆப் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 50 ஐ தாண்டியது.

இந்நிலையில் ஓபனிங் பேட்ஸ்மேன் கேய்க்வாட் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார், பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் தனது பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை காட்ட தொடங்கினார் ஆனால் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் டூ பிளசிஸ் 50 ரன்களில் ஆட்டமிழக்க, அதிகமான சென்னை அணியின் ஸ்கோர் ஒரு கட்டத்தில் ஆமை போல் நகர தொடங்கியது. இந்நிலையில் கேப்டன் தோனியும், ஜடேஜாவும் களத்தில் நின்று 19 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஹர்ஷல் பட்டேல், முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீச வந்தார். ஏற்கெனவே டூ பிளசிஸ், ரெய்னா, ராயுடு ஆகிய மூன்று விக்கெட்களை வீழ்த்திய தலைக்கனத்தில் 20வது ஓவரின் முதல் பந்தை வீசினார்.

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் விளையாடிய ஜடேஜா, பந்தை எல்லை கோட்டிற்கு வெளியே அனுப்பினார். அதே வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பினார் ஜடேஜா. இதனால் தடுமாறிப்போன ஹர்ஷல் பட்டேல் அடுத்த பந்தை நோபாலாக வீசினார்.

அதிரடியாக ஆடி அந்த ஓவரின் இறுதியில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஒரு நோபால் என 37 ரன்கள் குவித்தார் ஜடேஜா. இதனால் 28 பந்துகளுக்கு 63 ரன்களை எடுத்தார் ரவீந்திர ஜடேஜா. சென்னை அணியின் ஸ்கோரும் ஆட்ட முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தனர். இதனால் ஜடேஜாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் வியப்பில் ஆழ்தனர்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் வீரர்கள் தேவ்தத் படிக்கல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா் என 34 ரன்களை குவித்தனர். மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களில் ஆட்டமிழக்க கைல் ஜேமிசன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கோலி ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்.13 ஓவா்கள் முடிவில் சிராஜ் சிக்ஸருடன் 12, சஹல் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை தரப்பில் ஜடேஜா 3, தாஹிா் 2, சாம் மற்றும் ஷா்துல் தலா 1 விக்கெட் எடுத்தனா்.பின் 20 ஓவர்கள் முடிவில் 122 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தோல்வியை அடைத்தது. ஜடேஜா மூன்று விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணி முதன்முதலில் சென்னையிடம் தோல்வியடைந்தது. சென்னை அணிக்கு இது 4 வது வெற்றியாகும்.