ஹைலைட்ஸ்:

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலியில் முதலிடம் பிடித்தது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்தது.
  • டு பிளிஸ்சிஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐ.பிஎல் 15 வது லீக் போட்டியானது முபையில் நடைப்பெற்றது.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய காளத்தில் இறங்கி ஆடத்தொடங்கியது.ஆடத்துவக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப்டு பிளிஸிசில் இந்த இவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்

ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார் . இதனை தொடர்ந்து மொயின்அலி 12 பந்துகளில் 25 ரன்களும் கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரங்களும் எடுத்து களத்தைவிட்டு வெளியேறினார்.

டூ பிளில்சிஸ் இறுதிவரை ஆட்டத்தை இழக்காமல் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.இறுதி பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்ஸர் எடுத்து பந்தை பறக்கச்செய்தார்.

இந்நிலையயல் சென்னை அணி தங்களின் டார்கெட்டை நோக்கி விளையாடியதால் 20 ஓவர்களிளல் 3 விக்கெட் இழந்து, 220 ரன்கள் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி ஆட்டத்தொடக்கத்திலேயே தங்களின் முயற்சிகளை கைவிட்டனர்.

ரஸல், தினேஷ் கார்த்திக் இருவரும் தரமான ஆட்டத்தை ஆடி ரன்களை எடுத்தனர். ரஸல் 22 பந்துதில் 54 ரன் தினேஷ் கார்த்திக் 24 பந்துதில் 40 ரன்களை குவித்தனர்.  பேட் கம்மின்ஸ் தனி ஒருவனாக

களத்தில் போராடி 34 பந்துகளில் 66 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து 19.1ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து அணியில் அனைவரும் அவுட் ஆகி தோல்வி அடைத்தனர் .

இப்போட்டியில் சென்னை அணியின், டு பிளிஸ்சிஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த லீக் ஆட்டத்தில் வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது.