ஹைலைட்ஸ் :

  • ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 57 எடுத்தார்.
  • 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை குவித்த ஐதராபாத் அணி.
  • 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 172 ரன்களை எடுத்து எளிமையான வெற்றியை அடைத்த சென்னை அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது நேற்று டெல்லியில் உள்ள ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்தார், மணிஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்தார். கடைசியில் 20 ஒவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது ஐதராபாத் அணி.

அடுத்தகட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கி ஆட ஆரபித்தது. அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்களையும், டூ பிளஸ்சிஸ் 56 ரன்களை குவித்து ரசிகர்களை ஆரவாரம்படுத்தினர். இதனை தொடர்ந்து 18.3 ஒவர்களில் வெற்றி இலக்கை எட்டி சென்னை அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 172 ரன்களை எடுத்து எளிமையான வெற்றியை அடைத்தது.

இந்த ஐபிஎல் போட்டியில் ஐதாவது முறையாக வெற்றி பெற்றதால், புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆராவமுடன் கண்டுகளித்தனர்.

See also  நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்