ஹைலைட்ஸ்

  • 70000 மேற்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
  • 300 முதல் 400 வரையிலான கூடுதல் பேருந்துகள் இயக்கம்
  • கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும்

போக்குவரத்து துறை செயலாளர் சி. சத்தியமூர்த்தி நேற்று(ஏப்ரல் 21) செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்து கழகங்களில் 120000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 70000 மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயக்கத்தில் உள்ள போருந்துகள் கிருமி நாசுனி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளதால் இரவு 10.00 மணிக்குள் பேருந்துகள் சென்றடைய வேண்டும் என்பதற்க்காக பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் மாற்றத்தை மக்கள் அறிய பேருந்து நிலையங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 80 சதவீத விரைவு பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது பயணிகளின் வருகைக்கு ஏற்ப பகலில் இயக்கப்படுகிறது.

உள்ளூர் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வாழ்கியுள்ளது. சென்னையில் 300 முதல் 400 வரையிலான கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

 

See also  இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை

Categorized in: