இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் தமிழ் புத்தாண்டு களை இழந்து காணப்பட்டது.

உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டான உகாதி பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

See also  ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை