ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு டெல்லியில் நேற்று வண்ணமிகு பாராட்டு விழா மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டது.

பதக்கம் வென்றவர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதோடு இந்தியாவின் உண்மையான ஹீரோக்களாக சாதனை படைத்துள்ளார்கள் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி அசோகா ஹோட்டலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர் சிறப்பு அழைப்பாளர்களாக மகளிர் ஹாக்கி அணியினர் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் கோவ்லினா, ஈட்டி எரித்தலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா ஆகியோர் விழா அரங்கிற்கு வந்தபோது கைத்தட்டலுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த பாராட்டு விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, விளையாட்டு துறை இணை அமைச்சர் நிதிஷ் பிரமாணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து உரைவழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சோப்ரா முதல் ஹாக்கி வீரர்கள் வரை அனைத்து வீரர்களும் இந்தியா சார்பில் பங்கேற்று புதிய இந்தியாவின் புதிய ஹீரோக்களாக சாதனை படைத்துள்ளனர் என்றார். ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல இந்தியா 121 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் இந்த முறை நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வாங்கி கொடுத்த பெருமை சேர்த்துள்ளார் என்றார்.

விழாவில் பேசிய கிரண் ரிஜிஜூ இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அனைத்து வீரர்களையும் பாராட்டும் அதே நேரத்தில் போட்டியில் பங்கேற்று நாட்டுக்காக ஆடிய அனைவரையும் வாழ்வதாகவும் கூறினார். விழாவில் பேசிய நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதை பெருமையாக கருதுவதாகவும், இந்தியாவுக்காக பெற்ற இந்த விருதை இந்தியர்களுக்கே சமர்ப்பிப்பதாக தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

See also  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதலிடம்