தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் புத்தக விநியோகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து நிர்வாக பணிகளும் தோய்வு இன்றி நடைபெறலாம். ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று நிர்வாக பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்தயாரிப்பு பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடலாம். 50 சதவீத மாணவர்களுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து, ITI உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதுசேரி நீங்கலாகநீங்கலாக மற்ற மாநிலங்களுக்கான போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது. தியேட்டர்கள், பார்கள், திறக்கவும் பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், கலாச்சார நிகழ்வுகள், பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கான தடை நீட்டிக்கிறது. திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளில் 50 சதவீதம் பேரும், இறுதி சடங்கில் 20 சதவீத பேரும் பங்கேற்க்கலாம். இதை தவிர ஏற்கனவே அனுதிக்கப்பட்ட செயல்பாடுகள் எந்த வித மற்றம் இன்றி தொடரும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமல் செல்வது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதது என கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.