இனி WhatsApp மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எரிவாயு முகவர் நிறுவனங்கள் அறிமுகபடுத்தி உள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சமீபத்தில் பல ஆன்லைன் செயல்முறைகளைக எரிவாயு முகவர் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் புக் செய்ய, கேஸ் விநோயம் செய்பவரை தொடர்பு கொள்ளலாம், அல்லது இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது எரிவாயு நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண்ணில் ஒரு மெசேஜ் மட்டும் செய்து கேஸ் புக் செய்து கொள்ளலாம் என்ற வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்பில் எல்பிஜி முன்பதிவு

தற்போது எண்ணெய் நிறுவனங்கள் WhatsApp மூலம் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொள்ள தங்கள் சொந்த எண்களை வெளியிட்டு உள்ளது. இந்த எண்ணிற்கு நீங்கள் வெறும் REFILL என்று டைப் செய்து அனுப்பினால் மட்டும் போதும் உங்கள் LPG சிலிண்டர் புக் ஆகிவிடும். மேலும் WhatsApp மூலம் முன்பதிவு செய்த விவரங்களையும் காணலாம். HP மற்றும் Indane கேஸ் இரண்டும் WhatsApp மூலம் LPG முன்பதிவு செய்வும் சேவையை வழங்கி உள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டரை WhatsApp இல் எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வாட்ஸ்அப் மூலம் HP கேஸ் முன்பதிவு

நீங்கள் வாட்ஸ்அப்பில் HP கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்பினால், 9222201122 என்ற எண்ணை உங்கள் மொபைல் தொலைபேசியில் சேமித்து வைக்கவும். இந்த எண்ணிற்கு நீங்கள் BOOK என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

பிறகு முன்பதிவு தொடர்பான சில விவரங்களை உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் அந்த விவரங்களை வழங்க வேண்டும். நீங்கள் விவரங்களை வழங்கிய உடனே உங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யப்படும்.

இந்த எண்ணின் மூலம் பல சேவைகளைப் பற்றிய தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் நமக்கான LPG ஒதுக்கீடு, LPG மானியம், LPG ID ஆகியவற்றையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் மூலம் Indane கேஸ் முன்பதிவு

பொதுவாக Indane வாடிக்கையாளர்கள் 7718955555 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தங்கள் சிலிண்டர்களை (LPG Cylinder) முன்பதிவு செய்து கொள்வார்கள்.

தற்போது நீங்கள் WhatsApp இல் Indane கேஸ் முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து 7588888824 என்ற எண்ணிற்கு REFILL என்று எழுதி மெசேஜ் அனுப்ப வேண்டும். 7588888824 என்ற எண்ணை நம் மொபைல் தொலைபேசியில் சேமித்து வைத்திருக்கவேண்டும். ஏனெனில் முன்பதிவு தொடர்பான ஒவ்வொரு தகவகளை இந்த எண்ணில் பார்க்கலாம்.

முன்பதிவு செய்த STATUS ஐ பார்க்க, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து STATUS # என டைப் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, முன்பதிவு செய்தப்பின் வரும் ஆர்டர் எண்ணை உள்ளிட வேண்டும்.

வாட்ஸ்அப் மூலம் Bharatgas சிலிண்டர் முன்பதிவு

நீங்கள் Bharatgas வாடிக்கையாளராக இருந்தால்,பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800224344 என்ற எண்ணிற்கு BOOK அல்லது 1 என டைப் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும்.

இதற்குப் பிறகு, உங்கள் சிலிண்டர் முன்பதிவு ஆகிவிடும். உங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டதும் , உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு உறுதிப்படுத்தும் மெசேஜ் (confirmation message) வந்து சேரும்.

0 Shares:
You May Also Like
Gold Rate in chennai today
Read More

இன்றைய சென்னை தங்க விலை (Chennai Gold Rate Today) – மே 15, 2025

இன்று சென்னை மக்களுக்காக மிகவும் முக்கியமானது – தங்கம் வாங்குவதற்கு சரியான நேரமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்றைய தங்க விலை மிகவும் பயனுள்ளதாக…
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…