பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் காதல் கோட்டை  படத்தின் இயக்குநரான அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.தற்போது இவர் நடிகர் ஆகிறார்.

பிரபு சாலமன் இயக்கிய முதல் திரைப்படம் கண்ணோடு காண்பதெல்லாம். மேலும் இவர் கும்கி,மைனா,கயல் ,தொடரி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இயக்குனர்கள் நடிகர்களாவது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சமீபத்தில் கவுதம் மேனன், மோகன் ராஜா, சுசீந்திரன், பாலாஜி சக்திவேல் ஆகிய இயக்குனர்கள் நடிகர் ஆனார்கள்.

மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் “அழகிய கண்ணே” இந்த படத்தில் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .இந்த  படத்தை   விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின்  கதையும் , கதாபாத்திரமும் பிரபுசாலமனுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.  இந்த படத்தில் பிரபு சாலமன் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார்.

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன், லியோ சிவக்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

 

See also  ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Categorized in: