ஹைலைட்ஸ்:

  • மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
  • வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
  • வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன் படி, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும். இந்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று வந்த சான்றிதழில் வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூட்டம் கூடக் கூடாது என்றும் தெரிவித்து இருக்கிறது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

See also  விராபின் வைரஸ் எதிர்ப்பு மருந்து பயன்படுத்த மத்திய அரசு அனுமதி