மிக பெரிய பொது துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. SBI வங்கி வாடிக்கையாளர்களின் நிலையை அறிந்துகொள்ள முயற்சியில் வீட்டில் இருந்தே ஆவணங்களை அப்டேட் செய்ய தபால் மற்றும் ஆன்லைன் மூலம் அனுப்பும் வசதியை உருவாகியுள்ளது.

 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் வங்கிகளுக்கு செல்வது சிரமமாக உள்ளதால் SBI வங்கி இந்த சேவையை ஏற்படுத்தியுள்ளது. மே மாத இறுதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கேஒய்சி(KYC) ஆவணங்களை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

SBI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் KYC அப்டேட் செய்வதற்க்கான ஆவணங்களை தபால் மற்றும் ஆன்லைன் மூலம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான கால அவகாசம் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை குறிப்பிட்ட கால அளவில் அவர்களின் கேஒய்சி விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. குறைந்த அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், நடுத்தர அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளர்களுக்கு 8 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும், அதிக அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கேஒய்சி அப்டேட் செய்யப்படுகிறது.