ஹைலைட்ஸ் :

  • தமிழக அரசு நாளை (ஞாயிறு) முழுநேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
  • ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், பால் வினியோகம் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை செயல்பட அனுமதி இல்லை.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழக அரசு நாளை (ஞாயிறு) முழுநேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இவர்களுடைய வாகனங்களையும் பறிமுதல் செய்ய போவதாக காவல்துறை எச்சரித்துள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி இரவு நேர ஊரடங்கை பிறப்பித்தது. இரவு நேர ஊடங்கின்போது, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தடை அமலில் இருக்கும் என்று அறிவித்து இருந்தது.

அதேபோல் நாளை(ஞாயிறு) தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்துக்கும் தடை விதித்துள்ளது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் இவை அனைத்தும் செயல்பட அனுமதி இல்லை.

அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை கொண்டுச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் கொண்டுச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது .

தமிழக அரசு இந்த முழுநேர ஊரடங்கு விதிகளை மீறிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் அதிகாரி, வருவாய் துறை அதிகாரி , சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர்கள் சோதனையில் ஈடுப்படுவார்கள். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் வாகனங்களையும் பறிமுதல் செய்வோம் என காவல் துறை எச்சரித்துள்ளது.

See also  டி.சி.ஜி.ஐ. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது