• கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அலைவீச தொடங்கி தற்போது இது அதிவேகமாக பரவி வருகிறது.
  • இதற்கு முன் ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. இது கடந்த சில நாட்களாக 1.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.
  • கொரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவிவருகிறது. தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பிவருகிறது.
  • மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.
  • இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதிரடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
  • இருந்தாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது .
  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இதில் ஒரு நாளில் 904 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகவும் 75,086 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு 1.45 லட்சம் பேருக்கு உறுதியாகி இருந்தது. இது நேற்று 1.52 லட்சமாக பதிவாகி இருந்தது. இன்று கொரோனா பாதிப்பு 1.68 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.
  • தற்போது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1.35 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 2ஆம் இடத்துக்கு சென்றுள்ளது.
  • கொரோனா பாதிப்பில் அமெரிக்கா 3.18 கோடி பாதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. பிரேசில் 1.34 கோடி பாதிப்புடன் 3ஆம் இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
See also  பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியீடு ‘சூரி - வெற்றிமாறன் - விஜய் சேதுபதி’ இணையும் படத்தின்