சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. மத்திய படஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் கடத்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வந்தது இந்த நிலையில் தற்போது தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து இருக்கிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.6,465 க்கும் ஒரு சவரன் ரூ.51,720 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.89 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

படஜெட் தாக்களுக்கு பிறகு கடந்த 4 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து இருக்கிறது.