அதிக உடல் எடை உள்ளவர்கள் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு எவ்வளவு முயன்றாலும் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று செல்வோருக்காகவே அறிவியலாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த கருவி, வாயை குறிப்பிட்ட அளவிற்கு மேல் திறக்கவிடாமல் தடுக்கும். இந்த கருவி பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே டார்ச்சர் டிவைஸ் என்றே பெயர் பெற்றுவிட்டது. உடல் எடைக் குறைப்புக்காக நியூசிலாந்து நாட்டின் ஓட்டாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இந்த புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளது.

Torchar device

காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட இந்த கருவியை பற்கள் இடையே பொறுத்திக் கொள்ள வேண்டும். இந்த கருவியை பற்களுக்கிடையே பொறுத்திக்கொண்டால் வாயை 6 மி.மீ. அளவிற்கு மட்டுமே திறக்க முடியும். இதனால் திட உணவுப் பொருட்கள் உட்கொள்ளவே முடியாது. முழுக்க முழுக்க திரவ உணவுகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் உடல் எடை கணிசமான குறையும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

இந்த கருவியை வாயில் பொறுத்திக் கொண்ட பிறகு பேசவோ, சுவாசிக்கவோ எந்த சிரமும் இருக்காது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கருவியை பரிசோதனையின் போது பயன்படுத்தியவர்கள் இரண்டு வாரங்களில் 3.36 கிலோ எடை குறைந்து உள்ளார்கள். இந்த கருவியை உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்களின் வழிகாட்டுதல்படியே பயன்படுத்த வேண்டும் என்றும், கணிசமான அளவு உடல் எடை குறைந்ததும் வழக்கமான சிகிச்சை முறைக்கு திரும்பி விட வேண்டும் என்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பல் மருத்துவர்களால் மட்டுமே இந்த கருவியை பொறுத்த முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் பயன்படுத்துபவர் அகற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.