தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் உருவான ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டாகும் என்று படக்குழு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த படம் நேற்று OTT-யில் வெளியானது.

மேலும் இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் சிங்கள் பாடல்களும் இணைய வாயிலாகவே வெளியிடப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இந்த படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பரில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT-யில் வெளியிடவாய்ப்புள்ளதாக அப்போதே கூறப்பட்டது. இறுதியில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT-யில் 17 மொழிகளில் வெளியிட்டு அசத்தி உள்ளது. 17 மொழிகளில் இணைய வழியில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் குறிப்பாக ஈழத்தமிழ் மக்களை பெரிய அளவில் காயப்படுத்தும் விதித்ததில் படத்தின் கதைக்களம் முழுவதும் நகர்கின்றது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. மதுரை என்றாலே ரத்தம் ரணம் ரௌத்திரம் தான் என்றும், மதுரையில் இருந்து லண்டனுக்கு ரௌடிசம் செய்ய தனுஷ் செல்வதும், நம்பமுடியாத கற்பனை என்று பலர் முணுமுணுத்து வருகிறார்கள். இதுதான் ‘சினிமாத்துவம்’ என்று நினைக்கத்தோன்றுகிறது.

சமூகப்பிரச்சனை, அரசியல் என்று எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்க்கும்போது, ஜகமே தந்திரம் படம் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் பாராட்டும் ஒரு படமாக அமைந்துள்ளது

See also  வெனம் மூவி-Official Tamil Trailer 2

Categorized in: