• தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் செய்தார்கள்.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், “தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப் போல நானும் ‘ இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்’’ என்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
  • தமிழகம் முழுவதும் உள்ள தனுஷ் ரசிகர்கள் ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டினர்.
  • இதையடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.
  • ஆனால் ‘ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்த நிறுவனம் தான் ‘ஏலே’ பட த்தையும் தயாரித்தது. இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாகிவிட்டது.
  • அதனால் தியேட்டர் அதிபர்கள் ‘ஜகமே தந்திரம்’ படத்தை திரையரங்கில் வெளியிட மறுத்து விட்டனர்.
  • இந்த மோதல் போக்கினால் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் ஓ.டி.டி. தளத்திலேயே வெளியிட தயாரிப்பு நிறுவனம் சார்பில் முடிவு செய்துள்ளதாகவும், வெளியீடும் தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

See also  விஜய் டிவி சீரியலில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஷிவாங்கி மற்றும் பாலா

Categorized in: