தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் நடிப்பில்
வெளியாகி, வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாதாக தகவல்
வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து ஆனந்த்
சங்கர் இயக்கத்தில் 2016-ல் திரைக்கு வந்த ‘இருமுகன்’ படத்தை இந்தியில்
ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன .

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், இந்தி பதிப்பையும் இயக்குவதாக
என்று கூறப்படுகிறது. இதில் நடிப்பவர்கள் பற்றிய தகவல் விரைவில்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக இந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது
வழக்கமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக தமிழ் படங்களை இந்தியில் ரீமேக்
செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் லோகேஷ் கனகராஜ்
இயக்கிய மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர், சுதா கொங்கரா இயக்கத்தில்
சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ போன்ற படங்கள் இந்தியில் ரீமேக்
செய்யப்பட்டு வருகின்றன.

Categorized in: