mokka-jokes-in-tamil

கடி ஜோக்

ப்ரண்ட் 1 : ஒரு மாடு ஒரு நாள் கடைக்கு போச்சான் டக்குனு அங்க இருந்த கதவ கடிச்சு சாப்பிட ஆரமிச்சுடுச்சான் ஏன் ?

ப்ரண்ட் 2 : ஏன் ?

ப்ரண்ட் 1 : ஏனா அந்த கதவுல Pull-(புல்) னு போட்ருந்துச்சான்

ஒருத்தன் அவன் பிரென்ட் கிட்ட சொன்னானாம் டேய் எங்க அப்பாக்கு நான்தான்டா கதவு னு

ஏன் ?

ஏனா அவங்க அப்பாக்கு எப்போ கோவம் வந்தாலும் அவன “சாத்து சாத்து” னு சாத்துவாராம் …..

 

ஒருத்தன் அவன் போன் ல இருந்து ஒரு நம்பருக்கு கால் பண்ணானாம் கால் போகவே இல்லயாம்

ஏன் ?

ஒரு நம்பருக்கு கால் பண்ணா எப்படி 10 நம்பருக்கு கால் பண்ணாதான போகும்…

 

அம்மா : டேய் ஏன்டா வேர்க்க வேர்க்க சாப்டுட்டு இருக்க அந்த Fan ah போட வேண்டிதான

மகன் : இல்லமா அப்பாதான் வேர்வை சிந்தி சாப்பிட சொன்னாரு …..

படிச்சுக்கிட்டே விளையாடற விளையாட்டு என்னனு சொல்லு பாப்போம்

தெரியலயே ?

கபடி…

பாபு : டேய் ஒருத்தர் ஒரு புது வீடு கட்டிட்டு lights எல்லாமே set பண்ணிட்டு போயிடு சுவிட்ச்-ah போட்டாராம் எல்லாமே வெடிச்சிடிசான் டா

கோபு : ஏன்டா ?

பாபு : ஏன்னா அங்க இருந்தது எல்லாமே குண்டு-Bulb ஆம் ..

கோழி முட்ட போட்டுக்கிட்டே இருக்கே அது ஏன் ?

ஏனா அதுக்கு 1,2,3…. தெரியாது அதான்

ப்ரண்ட் 1 : மச்சான் நேத்து எங்க வீடு பக்கத்துல ஒரு அண்ணனுக்கு கல்யாணம் நடந்துச்சு மச்சான் நானும் போனேன் அங்க போன எல்லாரும் மேலையும் ஒரே ஈ -ஆ மொய்க்குது மச்சான்

ப்ரண்ட் 2 : ஏன்டா ?

ப்ரண்ட் 1 : ஏன்னா அந்த கல்யாணம் jam-jam னு நடந்துச்சு அதான்

ஒருத்தன் அவன் பொண்டாட்டி மேல எப்போ பாத்தாலும் தண்ணி தெளிச்சு கிட்டே இருந்தானாம்

ஏன் ?

ஏன்னா அவனோட மாமனார் அவரு பொண்ண பூ மாறி பாத்துக்க சொன்னாராம்

 

மாணவன் : ஐயா பச்சை கிளி , பஞ்சவர்ண கிளி னு நிறைய கிளி இருக்கு ஆனா ஒரு கிளியால மட்டும் பறக்க முடியாது அது என்ன கிளி ஐயா

தமிழ் ஐயா : எனக்கு தெரியல பா நீயே சொல்லேன்

மாணவன் : சங்கிலி …

ஒருத்தன் கோவத்துல அவன் வீட்ல இருந்த குக்கர் – அ தூக்கி கீழ போட்டானாம் ஆனா அது கீழ விழவே இல்லயாம்

ஏன்?

ஏனா அது Butterfly குக்கராம்

கோமதி : கோகிலா ஒரு யானை வேகமா ஒரு மளிகை கடைக்கு ஓடி போச்சான் அது அங்க போய் என்ன வாங்கும் ?

See also  தமிழ் விடுகதை மற்றும் விடைகள்

கோகிலா : தெரியலயே !…

கோமதி : வேற என்ன வாங்கும் மூச்சிதான் வாங்கும்.

ஒரு மன்னர் போருக்கு போகும் போது Eraser எடுத்துட்டு போனாராம்

ஏன் ?

ஏன்னா எதிரி நாட்டு மன்னரை அழிக்கவாம்

Praveen : டேய் ஏன் ஊருல ஒருத்தன தூக்கி சாம்பார்ல போட்டுடாங்கடா ?

Mani : என்னடா சொல்ற ?

Praveen : ஆமாடா ஏனா அவன்தான் எங்க

ஊருல பெரிய பருப்பான் !…

 

Friend : Machan பசு மாடு ஏன் தெரியுமா பால் கொடுக்குது

Machan : ஏன் ?

Friend : ஏனா அதால டீ காபி தர முடியாதுல அதான்..

 

ஒரு பையன் Daily ஸ்கூலுக்கு ஏணி எடுத்துட்டு போவானாம் ஏன் ?

ஏனா அது “மேல்” நிலைப்பள்ளி – யாம்

 

ஒரு டாக்டர் அவரு கிட்ட ரெண்டு காரு மூணு பைக் இருந்தாலும் டெய்லி நடந்தே ஹாஸ்ப்பிட்டல்க்கு போவாராம்

ஏன் ?

ஏன்னா அவரு “கால்நடை மருத்துவராம்” அதான் நடந்தே போவாராம்

 

ஒருத்தன் பைக் ல 120 கிலோ மீட்டர் வேகத்துல வந்து அவன் வீட்டு கதவ தட்டுனானாம்

ஏன் ?

ஏன்னா அவங்க வீட்டுல Calling Bell இல்லயாம் அதான்

ஒருத்தன் மழையில நனைஞ்சிகிட்டே வீட்டுக்கு வந்தானாம் வீட்டுக்கு வந்து பாத்தா மண்ட Full ah வீங்கி இருந்துச்சாம்

ஏன்?

ஏனா அவன் கொட்டுற மழையில நனைஞ்சிகிட்டே வந்தானாம்

 

ஒரு டாக்டர் ஆப்ரேஷன்-கு போகும் போது கடப்பாரை கோடாரி எல்லாம் எடுத்துட்டு போனாராம்

ஏன் ?

ஏன்னா Patient ah கல்நெஞ்சக்காரர்னு சொன்னாங்களாம் அதான்

 

வினோத் : மச்சான் ஒரு மாசத்துக்கு எத்தனை நாலு டா

மச்சான் : 30 நாள் டா

வினோத் : இல்ல தப்பு…. ஒரு மாசத்துக்கு மூணு நாலு தான் 4,14,24

 

ஒருத்தன் டாக்டர் குடுத்த மாத்திரைய எடுத்துக்கிட்டு சுடுகாட்டுக்கு போய்ட்டானாம்

ஏன் ?

ஏன்னா டாக்டர் அந்த மாத்திரைய வச்சி ஆவி பிடிக்க சொன்னாராம் அதான்

 

பையன் : அம்மா எல்லா பாய்-லயும் படுக்க முடியும் ஆனா ஒரு பாய்-ல மட்டும் படுக்க முடியாது அது என்ன மா ?

அம்மா : அது என்ன பாய் டா ?

பையன் : Du-bai

 

Friend 1 : மரமே இல்லாத காடு ஒன்னு இருக்கு அது என்ன காடு ?

Friend 2: என்னவா இருக்கும்..

Friend 1 : சிம் கா(ர்)டு …

 

ஒரு அப்பா அவரோட பையனுக்கு உடம்பு சரி இல்லனு Hospital ku கூட்டிட்டு போனாராம் டாக்டர் ஊசி போட வந்தா அந்த அப்பா தடுத்துகிட்டே இருந்தாராம்

See also  60+ தமிழ் விடுகதைகள் with answers

ஏன் ?

ஏன்னா அது “தடுப்பு” ஊசியாம்

 

ஒருத்தர் சொன்னாராம் அவரு பையன் படிக்கிற ஸ்கூல் ல பூனைகள் நடமாட்டம் அதிகமா இருக்குனு சொன்னாராம்

ஏன் ?

ஏன்னா அது “எலி மெண்டரி” ஸ்கூல் ஆம்

 

ஜெனனி : சிந்து ஒரு நாள் A,B,C,D…எல்லா Letters kum Running Race வச்சாங்களாம் எல்லா Letters-um ஓடி போச்சாம் ஆனா S-letter மட்டும் நீந்தி போச்சாம் ஏன் ?

சிந்து : ஏன் டி ?

ஜெனனி : ஏன்னா அதுக்கு முன்னாடி R (ஆறு) இருக்குல

 

பையன் : அப்பா குயில் முட்ட போடும் காக்கா முட்ட போடும் ஆனா ஒரு பறவை மட்டும் முட்ட போடாது அது என்ன பா ?

அப்பா : எனக்கு தெரியலபா நீயே சொல்லேன் ?

பையன் : ஆண் பறவை பா…..

 

Student : டீச்சர் உங்களுக்கு மைக்கேல் ஜாக்சன்-அ தெரியுமா ?அவருக்கு ஆடத்தெரியும் பாடத்தெரியும் ஆனா உக்கார சொன்னா மட்டும் உக்கார மாட்டாரு ஏன் டீச்சர் ?

Teacher : ம்ம்ம் தெரியலயே டா !…

Student : ஏனா அவருக்கு தமிழ் தெரியாது ….

 

பேரன் : பாட்டி ஒருத்தனுக்கு அடிபட்டுடிச்சான் அவன் Hospital கு போனானாம்… டாக்டர் போயிட்டு ரத்தம் எடுத்துட்டு வா-னு சொன்னாராம்… அவன் போயிட்டு இலைய அறுத்துட்டு இருந்தானாம் ஏன் பாட்டி ?..

பாட்டி : தெரியலயே ?…

பேரன் : ஏனா டாக்டர் இள-ரத்தம் கொண்டு வர சொன்னாராம்..

சப்பாத்திக்கும் “Naan”கும் Running Race வச்சாங்களாம் அதுல Naan ஜெயிச்சுடுச்சாம் ஆனா பரிச சப்பாத்திக்கு குடுத்துட்டாங்களாம் ஏன் ?

ஏனா யாரு ஜெயிச்சா னு கேட்டப்போ சப்பாத்தி Naan (நான்)னு சொல்லிடுச்சாம் அதான்

 

பேத்தி : பாட்டி ஒரு வயசான முதியவர் ஒரு பசு மாட்ட கூட்டிகிட்டு போருக்கு போனாராம் பாட்டி

பாட்டி : அச்சச்சோ அவரும் அந்த மாடும் திரும்ப வந்தாங்களா

பேத்தி : வந்துட்டாங்க பாட்டி அவரு மாட்ட கூட்டிட்டு போனது வைக்கப் போர்-கு…