கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார், அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். 46 வயதான நடிகர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது திடீரென சரிந்து விழுந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் “பதிலளிக்க முடியாத” நிலையில் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் ஆழ்ந்த சோகத்தில் உலுக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக்குடன் மக்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்