Homeசெய்திகள்மாணவர்களுடன் இன்று 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் மோடி கலந்து உரையாடல்

மாணவர்களுடன் இன்று ‘ஆன்லைன்’ வாயிலாக பிரதமர் மோடி கலந்து உரையாடல்

- Advertisement -

பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் ‘ஆன்லைன்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் ‘பரிக் ஷா பே சர்ச்சா’ எனப்படும் ‘தேர்வுகள் பிரச்சனை அல்ல’ என்ற தலைப்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

இந்த ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் ‘ஆன்லைன்’ வாயிலாக இன்று(ஏப்ரல் 07) நடைபெற உள்ளது. பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 14 லட்சம் பேர் ‘பரிக் ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி இன்று இரவு 7:00 மணிக்கு நடைபெறும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொது தேர்வுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக ‘பரிக் ஷா பே சர்ச்சா’ கலந்து உரையாடல் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில் உங்களை நேரில் சந்தித்து உரையாட ஆவலாக இருக்கிறேன். ‘வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற நினைக்கும் மாணவர்கள் பொது தேர்வுகளை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Exit mobile version