ஹைலைட்ஸ்:

  • பெங்களூரு அணியின் ஏபி டிவில்லியர்ஸ், 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆடினார்.
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுக்கமுடித்தது.
  • ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

IPL 14-வது சீசனில் 22-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த். இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்து களத்தை அதிரவைத்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணியின் ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆடினார். பின் விராட் கோலி 12, படிக்கல் 17, ராஜத் படிதர் 31, மேக்ஸ்வெல் 25 ரன்களை குவித்தனர். இறுதியில் 171 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி.

172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களத்தில் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுக்கமுடித்தது.

இறுதி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி பந்துகளை வீணாக்கி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் அதிகமாக ரிஷப் பந்த் 58(48), ஹெட்மயர் 53(25) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருந்தும் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. பெங்களூரு அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றது.

See also  ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு