எஸ்பிஐ யோனோ வழங்கும் சூப்பர் சலுகை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

போஸ்ட் ஆபீஸில் பணம் போட செலவு பண்ணணுமா? இதுதான் ரூல்ஸ்!

தற்போது எஸ்பிஐ வங்கிவுடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி அமைத்து, சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கார் வாங்கும் நோக்கத்தில் இருப்போருக்கு இந்த சலுகை பொருந்தும் . இதன்படி, எஸ்பிஐ வங்கியின் யோனோ (YONO) ஆப்பில் டொயோட்டா கார் புக் செய்து சலுகைகளை பெற்றுக்கொள்ளம்.

டொயோட்டா நிறுவனத்தின் கார்களை வாங்க எஸ்பிஐ யோனோ ஆப்பில் புக்கிங் செய்ய வேண்டும். கார் மட்டுமல்லாமல் Accessories புக்கிங்கும் செய்துகொள்ளலாம். இத்துடன் ரூ.5,000 மதிப்புள்ள Accessories பெற்றுக்கொள்ளலாம்.

இதுபோக, கார் கடனில் வட்டிச் சலுகையும் கிடைக்கும். யோனோ ஆப்பில் டொயோட்டா கார் புக் செய்தால் 0.25% வட்டிச் சலுகை கிடைக்கும். இதுபோக யோனோ ஆப்பில் கார் புக்கிங் செய்வதன் மூலம் பல்வேறு சலுகைகளை பெறலாம்.

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நிம்மதி.. எஸ்பிஐ சொன்ன மகிழ்ச்சியான நியூஸ்!

இதேபோல ஏற்கெனவே Tata Safari, Renault Kiger ஆகிய கார்களுக்கும் பிராசஸிங் கட்டணச் சலுகையுடன் எஸ்பிஐ வங்கி கார் கடன் வழங்கியது.

இச்சலுகையைபெறுவதற்கு யோனோ ஆப்பில் கார் புக்கிங் செய்ய வேண்டியது அவசியம்.

0 Shares:
You May Also Like
Ola S1 launch
Read More

ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் கூட்டரின் சிறப்பம்சங்கள்

ஓலா ஸ்கூட்டர் முன்பதிவு கடந்த மாதம் திறக்கப்பட்டது மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இறுதியாக தனது முதல் பங்களிப்பை அறிமுகப்படுத்துகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன்…
Read More

எஸ்பிஐ வங்கியின் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்!

கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு இடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத…
Read More

புதியதாக இந்த ஆண்டு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்!

கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட வில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து இருக்கிறது.…
Read More

ஏப்ரல் 18 ஆம் தேதி RTGS முறையில் பண பரிமாற்ற செய்ய 14 மணிநேரம் தடை

Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறையாகும். ரிசர்வ்…
Read More

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கும் வங்கிகள்

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட…
Read More

இன்று நள்ளிரவு முதல் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா…