புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பெடிக்கும் இடையே கடுமையான மோதல் உருவாகி வந்தது.
துணை நிலை ஆளுநரை மாற்றவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி போர்க்கொடி எழுப்பி வந்தார். இதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 16 ஆம் தேதி கிரண் பெடியை திரும்பப்பெறுவதாக கூறினார்.
இதற்கிடையே, தெலுங்கானாவில் 2- வது ஆளுநராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பு ஏற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் 5-வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றார்.இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி நாராயணசாமி கலந்துகொண்டார்.
gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்