நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 59 ஆயிரத்து 384 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றியிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.01 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக 46 ஆயிரத்து 617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 ஆயிரத்து 384 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 853 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 637 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 4230 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அதிக பட்சமாக கோவையில் 486 பேருக்கும், ஈரோட்டில் 395 பேருக்கும், சென்னையில் 238 பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 952 பேர் குணமடைந்தனர், நேற்று சிகிச்சை பலனின்றி 97 பேர் உயிர் இழந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 36 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 கோடியே 38 லட்சத்து 30 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக 39 லட்சத்து 79 ஆயிரத்து 322 பேர் உயிரிழந்துள்ளனர். குதொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 16 கோடியே 82 லட்சத்து 62 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 34 கோடியே 41 லட்சத்து 158இற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 38 லட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 20 லட்சத்து 8217 தடுப்பூசிகள் முதல் தவணையாகவும், 97 ஆயிரத்து 458 தடுப்பூசிகள் இரண்டாவது தவணையாகவும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 61 ஆயிரத்து 392 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளன. முதல் தவணையாக 1 கோடியே 32 லட்சத்து 62 ஆயிரத்து 371 பேரும், இரண்டாம் தவணையாக 25 லட்சத்து 99 ஆயிரத்து 21 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

See also  சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!