தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 512 பேருக்கு தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 159 பேர் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். ஆனால் தினசரி உயிரிழப்பு மீண்டும் நூற்றுக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 118 உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 39 ஆயிரத்து 335 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மாவட்டங்களைப் பொருத்தவரை கோவையில் கடந்த 24 மணி நேரத்தில்   563 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 493 பேருக்கும், சேலத்தில் 302 பேருக்கும், திருப்பூரில் 281 பேருக்கும், சென்னையில் 275 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.