2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்  செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

  • நகர்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி.
  • கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
    மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு..
  • கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும்,கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி.
  • ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும். உலகில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில்  ஒன்று இந்தியா.
  • கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத நோய் தொற்று காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஏழைகள் நலவாழ்வு நிதி உதவி திட்டத்தை பிரதமர் துவக்கினார்.
  • கொரோனா காலத்தில் கடினமான சூழலை எதிர்கொள்ள சுயசார்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்.கொரோனாவுக்கு எதிராக இந்திய மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டு வந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 தடுப்பூசிகள் வர உள்ளது. பொருளாதாரத்தை நிலைநிறுத்த 5 மினி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • சுயசார்பு இந்தியா திட்டம், சரிவில் இருந்து மீள உதவுவதாகவும். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது என்றும், கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும், 2021ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்,புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

2021- 22 பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தாக்கல் | Budget Live Budget Live, budget live updates,union budget live updates,union budget live,today budget live,budget 2021,budget 2021 live

See also  +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது.