நெற்றிக்கண் படத்திலிருந்து பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்பொழுதும் தனி மவுசு தான்.

2011 ஆண்டு கொரிய மொழியில் வெளியான ‘ப்ளைண்ட்’ எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். இதை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தை மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார்.

கண் பார்வை இல்லாத ஒரு பெண், தன்னுடைய மற்ற திறமைகளை வைத்து தொடர்ந்து கொலையில் ஈடுபடும் குற்றவாளி ஒருவரை கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதையாம்.

இந்நிலையில், நெற்றிக்கண் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த பாடலை பிரபல பிண்ணனி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

மேலும் நெற்றிக்கண்ணை தொடர்ந்து, அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.