• மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையானது, வாட்ஸ்அப் குழுவில் உள்ள உறுப்பினா்கள் பதிவிடும் தவறான, சா்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அக்குழுவின் அட்மின் பொறுப்பேற்க முடியாது என்று அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
  • மகாராஷ்டிராவை சோந்த கிஷோர் தருண் (33) என்பவா் நடத்தி வந்த வாட்ஸ் ஆப் குழுவில், அட்மின் கிஷோர் மீது பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாகவும், நிற ரீதியாகவும் கருத்துகளை பதிவிடுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • கிஷோர் மீது தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கும், பெண்களை இழிவுபடுத்துவது போன்ற பிரிவுளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • கிஷோர் இந்த வழக்கை எதிர்த்து மும்பை உயா்நீதிமன்ற நாகபுரி கிளையில் மனு தாக்கல் செய்தார்.
  • இந்த வழக்கில் காவல்துறையினர் கூறியதாவது, வாட்ஸ் ஆப் குழுவில் பெண்களுக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்ததாகவும், அந்த நபர்களை கிஷோர் குழுவை விட்டு நீக்கவில்லை எனவும் நீதிபதினரிடம் தெரிவித்தனர்.
  • வாட்ஸ்அப் குழுவை நிர்வகிப்பவா் பதிவிடப்படும் கருத்துகளைத் தணிக்கை செய்யும் நபரோ அல்லது கட்டுப்படுத்தும் நபரோ அல்ல என்றும், குழுவில் உள்ள மற்ற நபா்கள் செய்யும் தவறுகளுக்கு அட்மின் எப்படி பொறுப்பாக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
  • வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினா்களை சேர்ப்பதும் மற்றும் நீக்குவதும் மட்டும் தான் ‘வாட்ஸ்அப் குழுவை நிர்வகிப்பவர் செய்ய முடியும்.
  • அதில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவர் முழுமையாக பொறுப்பு என்று கூற முடியாது என்று நீதிபதிகள் அதிரடியாக கருத்து கூறினார்.

எனவே தவறான பதிவை குழுவில் பதிவிடும் நபா்கள்தான் அதற்குப் பொறுப்பேற்கமுடியும் என்றும், கிஷோர் மீது பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது

See also  மஞ்சள் தூள் - பயன்கள், பக்க விளைவுகள் மற்றும் பல