ஹைலைட்ஸ் :

  • உலக புத்தக தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
  • புத்தகமானது நமக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
  • உலக புகழ் பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர், இவரின் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

உலக புத்தக தினமாக ஏப்ரல் 23 ஆம்தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் அனைவரும் புத்தகம் வாசிக்கு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். அனைவரும் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் சிறந்த சமுதாயத்தை படைக்க உறுதி ஏற்போம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வில்லியம் சேக்ஸ்பியர் என்பவர் உலக புகழ் பெற்ற நாடக ஆசிரியர், இவரின் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளை அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏப்ரல் 23 ஆம் தேதி புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1996-ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாளில், அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி – பதிப்பாளர் – வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் போன்ற இலக்குகளை நோக்கி பயணிக்கவே ஓர் உலகளாவிய இயக்கமாக இந்த தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

இன்றைய சவால் நிறைந்த சூழலில், வரலாற்றின் தொடர்ச்சியை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவும் புத்தக வாசிப்பே நமக்கு பெரிதும் உதவும். பொதுமக்களின் மேன்மைகளை வாழ்த்தவும், சக மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்வதில் சிறந்த புத்தகங்களே முக்கிய பங்கு வ்சகிக்கின்றன. புத்தகமானது, நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.

எனவே உலக புத்தக தினத்தில் புத்தக வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டிய முயற்சியை கடைபிடிக்கவேண்டும். படைப்பாளிகள், வாசகர்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

See also  கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் அழைப்பு