| 1)அடங்காவாரிதி |
| அடங்காத + வாரிதி = எப்போதும் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் தென் கடல். |
| 2)அத்தி |
| உயிர் ( விதை) நிறைந்த அத்திப்பழம் போன்ற கடல். |
| அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந்தாதி -33). |
| 3)அபாம்பதி |
| அபாகம் + பதி =பகுக்க முடியா கடவுள் |
| சிந்தாமணி நிகண்டில் அபாம்பதி என்ற சொல் காணப்படும் செய்யுள் எண் 185 கடல் என பொருள்படும். |
| 4)அம்பரம் |
| அம் + பரம் = நீர் கடவுள் |
| எரிகணை யேவ வம்பரமுற்றது. (பாரத. பதினான். 93) |
| 5)அம்புதி |
| அம்+புதிர் = நீர் ரகசியம் |
| 6)அம்புநிதி |
| நீர்+புநிதம் = புனித நீர். (சிந்தாமணி நிகண்டு -205) |
| 7)அம்புவி |
| நீர்+புவி= நீர் நிறைந்த புவி பரப்பு. |
| 8)அம்போதி |
| சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார் |
| அம்போதி கடைந்தான் … பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் |
| கந்தர் அந்தாதி- அருணகிரிநாதர் |
| 9)அரலை |
| சூடாமணி நிகண்டு கடல் என்கிறது. |
| 10) அரி |
| பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
| 11)அருணவம், கார்கால மாயக்கடல் |
| அரு+ நவம் |
| அரு = மாயை |
| நவம்= கார்காலம் |
| (பிங்கல நிகண்டு ) |
| அருவினி லுருவந் தோன்றி (சி. சி 1, 27) |
| 12)அலை |
| அலை கடலில் மட்டும் தோன்றுவதால் அலை என்றாலே கடல்தான். |
| அலைவளம் பெரிதென்கோ (நைடத.நாட்டு. 22) |
| 13)அலைநீர் |
| அலையடிக்கும் நீர் – கடல் |
| 14)அலைவாய் |
| அலையை வாயாக கொண்டது – கடல் |
| 15)அவாரபாரம் |
| அ+ வார்+ பாரம் |
| கடவுள்+ நீர் + பூமி |
| கடவுள் கொடுத்த நீரை தாங்கும் பூமி – கடல் |
| திருமால் அவ்வென்சொற் பொருளாவான் (பாகவ. சிசுபா. 20) |
| நீர். (சூடா.)வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ.159) |
| 16)அழுவம் |
| ஆழம் மிகுந்த கடல் பகுதி லோப்பு. |
| 17)அளக்கர் |
| உப்பை உருவாக்குவதால் கடலுக்கு அளக்கர் எனலாம். |
| அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர் (கந்தபு. ஆற்று 36) |
| 18)அன்னவம் |
| சூடாமணி நிகண்டு கடல் என்கிறது. |
| 19)ஆர்கலி |
| வெள்ளம் கடலில் சேரும் கடல் உதாரணமாக தாமரா என்ற கல்கத்தாவில் உள்ள கடல் பரப்பு இந்த நீர் உப்பு தன்மை குறைவாக இருக்கும் கடல் வென்மையாக இருக்கும். |
| ஆர்கலி நறவின் அதியர் கோமான் |
| போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி (புறநானூறு -91) |
| 20)ஆலம் |
| கடல்மீது மழை பொழியும் போது கடலுக்கு ஆலம் என பெயர். |
| 21)ஆழம் |
| கடலில் அதிகமான நீர் அளவை குறிக்கும் பெயர். |
| 22)ஆழி |
| ஆழி என்பது கடலில் இரண்டு தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் நீரின் ஆழம் மிக குறைவாக இருக்கும் அங்கே கடற்கரையில் அடிக்கும் அலையை விட வித்யாசமாக கடல் விரியும் அதை ஆழி என்கிறோம் இந்த ஆழி மிக கடுமையானது கப்பல் கூட மூழ்கிப்போகும். |
| கடலில் பாறை உயர்ந்து காணப்படும் பகுதி மற்றும் கடல் திட்டு ( பொட்டல்) பகுதியில் ஆழி உருவாகும். |
| வென் நுரை கக்கும் கடல் ஆழி |
| பெருங்கடற் காழியனையன். (புறநானூறு. 330) |
| 23)இரத்தினகருப்பம் |
| சமுத்திரம் என பொருள் படும். |
| 24)இரத்தினாகரம், |
| தனுஷ்கோடிக்கு வடக்குள்ள கடல். |
| 25) உததி |
| அமுத உததி விடம் உமிழும் செம் கண் … அமுதமாகிய திருப்பாற் |
| கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும், (திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 23) |
| ஒருததிகாட்டுமால் (இரகு. நாட்டுப். 41) |
| 26)உந்தி |
| கடல் உந்தியுலகத்தில் (சி.சிடர் உலோக 1) |
| 27)உரகடல் |
| அடி காற்று சமயத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் இதை உரகடல் என்கிறோம். |
| 28)உரவுநீர் |
| கடல் என பொருள் |
| முள்வாய் சங்கம் முறை முறை ஆர்ப்ப |
| உரவுநீர்ப் பரப்பினூர் துயில் எடுப்பி (சிலப். 4, 79) |
| 29)உலாவுநீர் |
| நீவாடு அதிகம் உள்ள நேரத்தில் கடலின் பெயர். |
| 30)உவரி |
| உவர் நிலத்து வியாபார பட்டணம் |
| உலகம் எதிர்பார்க்கும் பட்டணம் என்கிறது கிழே உள்ள பாடல். |
| ‘திருகு வெஞ் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்; |
| அருகு போகின்ற திங்களும் மறு அற்றது; -அழகைப் |
| பருகும் இந் நகர்த் துன் ஒளி பாய்தலின், -பசும் பொன் |
| உருகுகின்றது போன்று உளது, உலகு சூழ் உவரி. 15 |
| உலகுசூ ழுவரி (கம்பராமாயணம் 15) |
| 31)உவா |
| பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
| 32)ஊர்திரைநீர் |
| ஆதிரையான் ஆதிரையான் என்றே அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு” என முத்தொள்ளாயிரம் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானை “ஆதிரையான்’ என்ற பெயரிட்டுக் காட்டியது. உலகமே அப்பெயரைச் சொல்லி அயரும் என்றது. பெரியாழ்வார் பாடல், |
| 33)எற்றுந்திரை, |
| ஏற்றுந்திரை. சிராபெறுந்தம. வெனினும். எற்றுந்திரை. சீறூர்ப் பெருந்தம். |
| கல்லாடர் எழுதிய – கல்லாடம் |
| 34)ஓதம் |
| கடல் வற்று பெருக்கை குறிக்கும் வார்த்தை. |
| ஓதம் (Tide) என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். ஆழ்கடல் பரப்புத் தவிர்ந்த தரையும் கடலும் சார்பரப்பில் உருவாகும் ஓதங்களைப் பொதுவாக இரு வகைகளாகக் குறிப்பிடலாம். ஒன்று கழி ஓதம் – மற்றையது கடல் ஓதம். |
| இவற்றை பாம்பன் பாலத்தில் கடலின் வற்று – பெருக்கு – நீர் மாறல் நிலைகளைத் தெளிவாகப் பார்க்கமுடியும். |
| ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(Tide towards the Shore – High tide) கடல் ஓதம்(Tide towards the Sea – Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் பரதவர்கள். |
| 35)ஓதவனம் |
| கடல் பெருக்கை குறிக்கும் பெயர். |
| அறையோதவனஞ்சூழ் புவி (பாரத. அருச்சுனன்றீர். 2) |
| 36)ஓலம் |
| கடல் ஓலமிடுவதை குறிக்கும் பெயர். |
| 37)கடல் |
| இங்கே எழுதபட்டு உள்ள அனைத்தும் இதை சார்ந்து தான். |
| 38)கடும்புனல் |
| வேகமான நீவாடு |
| காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167) |
| 39)கயம் |
| ஆழமான துறைமுகம் இயற்கை துறைமுகம் ஒரிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் போன்றது. |
| கயங்கரந்துறையரக்கரை (உபதேசகா. விபூதி 201). |
| ஆழம் கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து(சீவக. 592). |
| 40)கலி |
| பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
| 41)கழி |
| கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு தரவை |
| மாக்கழி மலர்ந்த நெய்தலானும்(புறநா. 48, 3) |
| 42)கார்கோள் |
| நீர் உலகம் என பொருள் படும் கடல். |
| 43)கார்மலி |
| நீரால் நிரப்பப்பட்ட என பொருள் படும் கடல். |
| 44)கார்வலயம், |
| பூகோளத்தின் நீர் பகுதி என பொருள் படும். |
| 45)கிடங்கர் |
| திரைக்கிடங்கர்சூழ் குவலயப்பரப்பில் (உபதேசகா. விபூதி 35) |
| 46)கிருபீடபாலம் |
| யாழ். அகராதி கடல் என பொருள் கூறுகிறது. |
| 47)கூபாரம் |
| கூ+ பாரம் |
| பூமியின் பாரமான பகுதி என்பதால் கடல். |
| 48)சகரநீர் |
| சகரர்தோண்டிய கடல் என பெருள். |
| 49)சசி |
| நிகண்டு கடல் என்றும் அர்த்தம் கூறுகிறது. |
| 50)சமுத்திரம் |
| பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
| 51)சலநிதி |
| கடல் என பொருள். |
| தகுசலநிதிநிறை தரத்த தாயினும் (இரகு. திக்குவி. 29). |
| 52)சலராசி |
| கடல்லோடு தொடர்புடைய நண்டு, மீன் முதலியவற்றின் ராசி பற்றி குறிக்கும் வார்த்தை. |
| 53)சாகரம் |
| சகரர்தோண்டிய கடல் என பெருள். |
| 54)சிந்து |
| சிந்து என்றால் கடல் என்றே பொருள் பரதவரில் இரண்டு பரதவர் உண்டு. |
| ஒருவர் சிந்து பரதவர் மற்றவர் கங்கை பரதவர் |
| சிந்து பரதவர் என்றால் கடல் பரதவர் என்றும் கங்கை பரதவர் என்றால் நதியில் மீன் பிடிப்பவர் என்றும் பொருள். |
| இதே பரதகுலத்தால் உருவாக்கபட்ட நாகரிகம் தான் சிந்து நாகரிகம் |
| 55)சிந்துவாரம் |
| கடற்கரை என பொருள் படும். |
| 56)சூழி |
| கடல் என்கிறது நிகண்டு. |
| 57)தரங்கம் |
| கடல் அலைக்கு மறு பெயர். |
| நீர்த்தரங்க நெடுங்கங்கை (பெரியபு. தடுத்தாட். 165) |
| 58)தவிசம் |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 59)திமிகோடம் |
| திமிங்கலம் வாழும் இடம் ஆகவே கடல் என பொருள் படும். |
| 60)திரை |
| அலை என பொருள் படும். |
| . |
| திரை கடலோடியுந் திரவியந்தேடு |
| 61)துனிநாதம் |
| கடல் என பொருள். |
| 62)தெண்டிரை |
| கடல் தெளிவை குறிக்கும் பெயர். |
| 63)தேனம் |
| யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
| 64)தொன்னீர் |
| தொல்+ நீர் கடல் என பொருள்படும். |
| 65)தோயதி, |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 66)தோயம் |
| கடல் என பொருள். |
| தோயமுஞ் சுவறப் பொரும்வேலா (திருப்பு. 101) |
| 67)தோழம் |
| கடல் என பொருள் படும். |
| முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா.88, 23) |
| 68)நதாதிபதி |
| நதிகளின் அதிபதி கடல். |
| 69)நதிபதி |
| நீர் கடவுள் வருணனை குறிக்கும். |
| 70)நதீனம் |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 71)நரலை |
| அலைபாயும் கடல் பொருள். |
| நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9, 3) |
| 72)நாமநீர் |
| புயல் சமயத்தில் அச்சத்தைத்தரும் கடல். |
| நாமநீர்வைப்பில் (குறள், 149). |
| 73)நித்தியம் |
| யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
| 74)நீரதி, |
| யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
| 75)நீரநிதி |
| நிகண்டு கடல் என்கிறது. |
| 76) நீராழி |
| பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
| 77)நீர் |
| கடல் என்றும் பொருள். |
| நீரொலித்தன்ன(மதுரைக். 369) |
| 78) நெடுநீர் |
| கடல் என பொருள் படும். |
| 79)நெடுங்கடல் |
| கரையடுத்த கடல் என பொருள். |
| 80)நேமி |
| திவாகர நிகண்டு கடல் என்கிறது. |
| 81)பயோததி |
| பாற்கடல் என பொருள்படும். |
| திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவவ.12) |
| 82)பயோதி |
| கடல் என பொருள் படும். |
| பயோதிபோற் சூழ்ந்ததாமே |
| (மேருமந். 1077) |
| 83)பயோநிதி |
| கடல் என கூறுகிறது யாழ் அகராதி. |
| 84)பரவை |
| பரந்து விரிந்த கடல். |
| பாய்திரைப் பரவை மீமிசைமுகிழ்த்த (பதினொன்றாம் திருமுறை பட்டினத்து பிள்ளையார் திருக்கழு. 1) |
| 85)பரு, |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 86)பாராவாரம் |
| கடல் என பொருள் படும். |
| பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28) |
| 87)பாழி |
| நிகண்டு கடல் என்கிறது. |
| 88)புணரி |
| உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6, 5) |
| 89)பெருங்கடல் |
| 90)பெருநீர் |
| பெருநீர் போகு மிரியன் மாக்களொடு |
| (சிலப். 6, 112) |
| 91)பெருவனம் |
| செறிந்த பன்மணிப் பெருவனம் (கம்பரா.முதற். 246). |
| 92)பேரு |
| யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
| 93)பௌவம் |
| ஆழம் மற்றும் கடல் என பொருள்படும். |
| 94)மகரசலம் |
| மகரசலந்தரளந் தருவே தவனத்தன் (மறைசை. 90). |
| 95)மகரநீர் |
| இனமழை மகரநீரை முடிவுற முகப்ப (கம்பரா. குகப். 49) |
| 96)மகராங்கம் |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 97)மகரி |
| நிகண்டு கடல் என்கிறது. |
| 98)மகாகச்சம் |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 99)மகாசயம் |
| யாழ் அகராதி சமுத்திரம் என்கிறது. |
| 100)மகான்னவம் |
| யாழ் அகராதிகடல் என்கிறது. |
| 101)மகீப்பிராசீரம் |
| பூமியைவேலியாக வுடையதுகடல். |
| 102)மகோததி |
| மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42) |
| 103)மாதங்கம் |
| நிகண்டு கடல் என்கிறது. |
| 104)மாதோயம் |
| மாதோயந்தன்னை வயிறலைத்து (கந்தபு. தேவரையே. 17). |
| 105)மாறாநீர் |
| மாறாநீர் வையக் கணி (குறள்,707, மணக்.). |
| 106)மிருதோற்பவம் |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 107)மீரம் |
| சமுத்திரம் என்கிறது யாழ் அகராதி |
| 108)மீனாலயம் |
| மீன்களின் இருப்பிடமான கடல் |
| 109)முண்டகம் |
| நிகண்டு கடல் என்கிறது. |
| 110)முதனீர் |
| கடல் என்கிறது நிகண்டு |
| 111)முதுகயம் |
| முதுகயந் தீப்பட (திவ். பெரியதி. 8, 5, 6) |
| 112) முதுநீர் |
| நிலத்துக்கு முந்தியது என பெருள்படும் கடல். |
| 113)முந்நீர் |
| ஆற்றுநீர், ஊற்றுநீர்,மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது. |
| முந்நீர் விழவி னெடியோன் (புறநானூறு 9) |
| 114)முன்னீர் |
| நிலத்துக்கு முன் தோன்றியதான கடல் |
| 115)யாதபதி |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 116)வாங்கம் |
| யாழ் அகராதிகடல் என்கிறது. |
| 117)வாகினீபதி |
| சமுத்திரம் என யாழ் அகராதி கூறுகிறது. |
| 118)வாரகம் |
| கடல்என பொருள் படும் நிகண்டு |
| 119)வாரம் |
| கடற்கரையை குறிக்கும். |
| 120)வாராகரம் |
| கடல் என நிகண்டு கூறுகிறது. |
| 121)வாரிதி |
| எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269). |
| 122)வாரிநிதி |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 123)வாரிராசி |
| யாழ் அகராதி கடல் என்கிறது. |
| 124)வாரீசம் |
| நிகண்டு கடல் என்கிறது. |
| 125)வாருணம் |
| பிங்கல நிகண்டு கடல் என்கிறது. |
| 126)விரிநீர் |
| ஆழியின் மருபெயர். |
| 127)வீசிமாலி |
| நிகண்டு கடல் என்கிறது. |
| 128)வீரை |
| திரைவீரை (திருவிசை. திருமாளி. 3, 5). |
| 129)வெள்ளம் |
| கடல் பெருக்கை குறிக்கும். |
| வெள்ளந்தாழ் விரிசடையாய் (திருவாச. 3, 1). |
| 130)வேலாவலையம் |
| பூமியின் எல்கை என பொருள். |
| 131)வேலை |
| கடற்கரை |
| பௌவவேலை (கந்தபு. மேருப். 46) |

