கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு இருந்தது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கல்வி நிலையங்கள் திறப்பு தள்ளிப் போனது. மாணவர்களுக்கு வீட்டில் இருந்த படியே ஆன்லைன், வாட்ஸ ஆப் மற்றும் விடீயோக்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

பொது தேர்வை கருத்தில் கொண்டு ஜனவரி 19ஆம் தேதி 12,10 அம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. நேற்று (பிப்ரவரி 8)9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிகள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்று கல்வி அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. 12, 10 வகுப்பு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் 19 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை அடுத்து 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழும்புகிறது. இதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர். கல்வி படத்தை குறைத்துள்ளதால் பள்ளிகள் திறப்பை தாமதப்படுத்த முடியாது. பிற வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வலியுறுத்தினால் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளனர். தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

See also  லாம்ப்டா மிக மோசமான வைரஸ் WHO எச்சரிக்கை.!

Categorized in: