- தமிழக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
- தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
- தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
- மேலும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் சில வேட்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
- இந்நிலையில் மாநில அரசு சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
- இந்த தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்கு அவகாசம் வழங்கப்படும். இந்த முறை அந்த அவகாசம் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இதைக்குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான கடைசி பிரசார நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது.
- மேலும் அரசியல் கட்சியினர் அன்று மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம்.
- தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் பணி நடைபெற்று கொண்டுயிருக்கிறது.
- இதை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதை பற்றி இன்று முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

