• தமிழக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
  • தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
  • தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
  • மேலும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் சில வேட்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
  • இந்நிலையில் மாநில அரசு சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
  • இந்த தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்கு அவகாசம் வழங்கப்படும். இந்த முறை அந்த அவகாசம் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இதைக்குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான கடைசி பிரசார நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது.
  • மேலும் அரசியல் கட்சியினர் அன்று மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம்.
  • தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் பணி நடைபெற்று கொண்டுயிருக்கிறது.
  • இதை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதை பற்றி இன்று முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
See also  NEET தேர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்..!