கொரோனா தொற்றின் 2 ஆம் அலை சூறைக்காற்றை போல் பரவிவரும் நிலையில் சில நெறிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தி வருகிறது. பக்தர்கள் அதிக கூடும் இடமான வைகுண்டம் காத்திருப்பு அறைகள், ஏழுமலையான் கோவில், அன்னதான கூட்டம், முடிகாணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படவேண்டும்.

22 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக திருப்பதியில் அளித்து வரும் சர்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனையை அன்னதானக்கூடம், வாடகை அறை அளிக்கும் இடம் உள்ளிடவற்றில் சோதனை செய்யப்படவுள்ளது. 2பேர் மட்டுமே வாடகை அறையில் அனுமதியளிக்கப்படவுள்ளது. சமூகஇடைவெளியை ஏழுமலையான் கோவில்,வைகுண்டம் காத்திருப்பு அறை,தரிசன வரிசைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும்.

வானொலியில் 5 மொழிகளியில் கொரோனபரவல் தடுப்பு விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. விரைவுதரிசன டோக்கன்கள் பெற்றவர்கள், நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்றவர்கள் மதியம் 1மணிக்குமேல் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் சானிடைசர் செய்யப்படுவதுடன் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங்கும் செய்யப்படும்.

தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் அரை மணிநேரம் முன்னதாக மட்டுமே வைகுண்டக்காதிருப்பு அறைக்கு செல்ல அனுமதிக்கபடுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

See also  சட்ட மன்ற தேர்தல் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு - சுனில் அரோரா