- கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
- இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் உறுதியாகியுள்ளது.
- இதனால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
- தேர்தலுக்குப் பின் ஊரடங்கு போடப்படும் என்ற யூகங்களும் சொல்லப்படுகிறது. முழு ஊரடங்கு என்பது வதந்தியே இதை நம்பவேண்டாம், ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
- செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், வாக்களிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
- தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கிறதா என நடத்தப்படும் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
- ஏப்ரல் 7ஆம் தேதிக்குப்பிறகு தமிழகத்தில் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்ற சோதனை மேற்கொள்ளப்படும். அதேபோல் தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையும் நடத்தப்படும்.
- இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது போதுமான அளவு தடுப்பூசி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
- வாக்குப்பதிவின்போது, கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒருமணி நேரத்தில் வாக்களிக்கலாம். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்புபோல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
- அதேபோல் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கு வரும் என்ற செய்தியை நம்பவேண்டாம்” என்று கூறினார்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

